தமிழ் காலண்டர் குறிப்பிடும் அதிதி என்றால் என்ன? திதி எத்தனை வகைப்படும்? கிருஷ்ணபட்சம், சுக்ல பட்சம் என்றால் என்ன?
அதிதி என்றால் என்ன? என் தினசரி காலண்டரில் அதிதி என்று குறிப்பிடப் பட்டுள்ளது? என்று இன்டர்நெட்டில் தேடினேன்! சில சுவாரஷ்யமான தகவல் கிடைத்தது!
திதி’ என்ற சொல் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தைக் குறிக்கிரத்தம்! அமாவாசை காலத்தில் சூரியனும் சந்திரனும் இணைந்திருக்கும். அதன் பிறகு சந்திரன் சூரியனை விட்டு விலகிச் செல்கிறது. அந்த தூரத்தை குறிப்பிட திதி என்ற அளவுகோல் பயன்படுவதாக குறிப்பிடுகிறார்கள்! இந்த தூரத்தை 30 பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் உள்ளதாக சொல்கிறார்கள். அவற்றில், கிருஷ்ண பட்சம் மற்றும் சுக்ல பட்சம் என்றும் அழைக்கிறார்கள். அதாவது, வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் வரும் திதிகளை இப்பெயர்கள் கொண்டு அழைக்கப்படுவதாக ஜோசிய வல்லுநர்கள் எழுதியுள்ளனர்.
S.No. | கிருஷ்ண பட்சம் | சுக்கில பட்சம் |
1 | பிரதமை | பிரதமை |
2 | துவிதியை | துவிதியை |
3 | திருதியை | திருதியை |
4 | சதுர்த்தி | சதுர்த்தி |
5 | பஞ்சமி | பஞ்சமி |
6 | சஷ்டி | சஷ்டி |
7 | சப்தமி | சப்தமி |
8 | அஷ்டமி | அஷ்டமி |
9 | நவமி | நவமி |
10 | தசமி | தசமி |
11 | ஏகாதசி | ஏகாதசி |
12 | துவாதசி | துவாதசி |
13 | திரயோதசி | திரயோதசி |
14 | சதுர்த்தசி | சதுர்த்தசி |
15 | அமாவாசை | பௌர்ணமி |
Leave a Reply